Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 62:59:58
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • 2024: ஆஸ்திரேலியாவின் சக்திவாய்ந்த 10 நபர்கள்

    02/10/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவின் சக்திவாய்ந்த நபர்கள் குறித்த தனது வருடாந்திர பட்டியலை The Australian Financial Review சஞ்சிகை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்நாட்டின் அதிசக்தி வாய்ந்த 10 நபர்கள் யாரென்ற பட்டியலைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியா முழுவதும் mpox வைரஸ் தொற்று அதிகரிப்பு!

    02/10/2024 Duración: 02min

    கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் சில பகுதிகளில் mpox தொற்று அதிகமாக பரவி வருகிறபோதிலும் ஆஸ்திரேலியாவில் இதன் பாதிப்பு குறைவாகவே காணப்பட்டது. இப்போது, ஆஸ்திரேலியாவிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • அமெரிக்காவிடமிருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் ஆஸ்திரேலியா! பின்னணி என்ன?

    02/10/2024 Duración: 08min

    ஆஸ்திரேலியாவில் மின் வாகனங்கள் உட்பட சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்பதான கூற்றை நஷனல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Barnaby Joyce தெரிவித்திருந்தார். அவரது கூற்றின் பின்னணி தொடர்பிலும் அமெரிக்காவிடமிருந்து ஆஸ்திரேலியா ஏவுகணைகளைக் கொள்வனவு செய்வதன் பின்னணி தொடர்பிலும் பாதுகாப்புபடைத்துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிவரும் சிதம்பரம் ரங்கராஜன் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மலைகள் ஆறுகள் இல்லாத யாழ் குடா நாட்டில் நீர் இருக்குமா?

    02/10/2024 Duración: 15min

    ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றி விட்டு ஐரோப்பா சென்று, தற்போது சுவீடன் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக கடமையாற்றும் முனைவர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை அவருடன் குலசேகரம் சஞ்சயன் நடத்திய நீண்ட நேர்காணலின் முதல் பகுதி.

  • இந்திய பேசுபொருள்: ஒரே நாடு, ஒரே தேர்தல்

    02/10/2024 Duración: 09min

    ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே தேர்வு வரிசையில் பாரதிய ஜனதா தலைமையிலான இந்திய அரசு முன்வைக்கும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் பற்றிய பின்னணியை அலசுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • ஆஸ்திரேலியாவிலுள்ள பாலஸ்தீனர்களுக்கான முதலாவது மனிதாபிமான விசா வழங்கப்பட்டது

    01/10/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 02/10/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இசைக்கருவிகள், இசைக்கலைஞர்களின் தேடலாக கீதவாணி விருதுகள் 2024

    01/10/2024 Duración: 06min

    யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் சிட்னி கிளை நடாத்தும் கீதவாணி விருதுகள் 2024 நிகழ்ச்சி வருகிற ஞாயிறுக்கிழமை (06 October 2024) Parramatta Riverside அரங்கில் நடைபெறவுள்ளது. இதுபற்றிய விவரங்களை சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களான அறிவழகன் மற்றும் பார்த்தீபன் ஆகியோர் எம்முடன் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • மேற்கு ஆஸ்திரேலிய சிறுமி Cleo Smith-ஐ கடத்தியவரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு!

    01/10/2024 Duración: 02min

    மேற்கு ஆஸ்திரேலியாவில் 4 வயதுச் சிறுமி Cleo Smith கடத்தப்பட்ட விவகாரத்தில், பதின்மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் தனது தண்டனையைக் குறைக்குமாறு விடுத்த வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது!

    01/10/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மூன்று சதவீத ஊதிய உயர்வினை NSW செவிலியர்கள் சங்கம் ஏற்பு

    30/09/2024 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 01/10/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • மெல்பனில் 'பாடும்மீன்' ஸ்ரீகந்தராசாவின் நூல் வெளியீட்டு விழா!

    30/09/2024 Duración: 21min

    எழுத்தாளர், கவிஞர், சட்டத்தரணி, சமூக செயற்பாட்டாளர், ஒலிபரப்பாளர் என பன்முகம் கொண்ட பாடும்மீன் சு ஸ்ரீகந்தராசா அவர்களது 'இன்னும் கன்னியாக' மற்றும் 'சங்க இலக்கிய காட்சிகள்' எனும் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா மெல்பனில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது தொடர்பிலும் அவரது எழுத்துப்பயணம் தொடர்பிலும் ஸ்ரீகந்தராசா அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    30/09/2024 Duración: 09min

    தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு, முதல் முறையாக நடைபெறும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு மற்றும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • “இலங்கையில் தமிழ் அரசியல் கட்சிகள் இடம் தெரியாமல் சிதைந்துள்ளன”

    30/09/2024 Duración: 18min

    இலங்கை அதிபர் பதவியேற்ற முதல் வாரத்திலேயே அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது மட்டுமன்றி சில ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

  • இலங்கையின் புதிய அதிபர் ஊழலை ஒழிப்பாரா?

    30/09/2024 Duración: 15min

    இலங்கை அதிபர் பதவியேற்ற முதல் வாரத்திலேயே அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது மட்டுமன்றி சில ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

  • "வாழ்வியல் கல்வி கற்பது வாழ்வின் கடைசி நொடிவரை தொடர்கின்ற ஒன்று"

    30/09/2024 Duración: 12min

    Dr வெங்கடாசலம் இறையன்பு தமிழ்நாடு அரசில் IAS எனப்படும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றிவர் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியவர்.

  • ஒரே வாரத்தில் 7 மூத்த Hezbollah தலைவர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் பலி

    30/09/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 30/09/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • வானில் இப்போது 2 நிலா- எப்படிப் பார்ப்பது?

    28/09/2024 Duración: 02min

    நாம் இரண்டாவது, மிகச் சிறிய நிலா அல்லது சந்திரனைப் பெறப் போகிறோம். எப்படி என்று யோசிக்கிறீர்களா? அது ஒரு அதிசய வானியல் நிகழ்வு. இது குறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    28/09/2024 Duración: 06min

    இந்த வார முக்கிய செய்திகள்: 28 செப்டம்பர் 2024 சனிக்கிழமை.

  • சிட்னியில் தொடரும் அகதிகள் போராட்டம்- கூடாரத்தை அகற்றுமாறு உத்தரவு!

    27/09/2024 Duración: 06min

    ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் சிட்னியில் நடைபெற்றுவரும் போராட்டம் 53 நாட்களை எட்டியுள்ளது. இது தொடர்பில் சுபாஸ் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்.

  • மெல்பனில் 75 நாட்களைக் கடந்து தொடரும் அகதிகள் போராட்டம்!

    27/09/2024 Duración: 06min

    ஆஸ்திரேலியாவில் வாழும் சுமார் பத்தாயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு நிரந்தர விசா வழங்கவேண்டும் என்று கோரி பல மாநிலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த பின்னணியில் மெல்பனில் நடைபெற்றுவரும் போராட்டம் இன்றுடன் 75 நாட்களை எட்டியுள்ளது. இது தொடர்பில் ரதி அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர் றேனுகா துரைசிங்கம்

página 12 de 25