Sbs Tamil - Sbs

தமிழ் சமூக விடுதலைக்காக நாத்தீகத்தோடு கைகோர்த்த ஆன்மீகவாதி

Informações:

Sinopsis

தமிழ்நாட்டில் சமயப் பணிகளை மட்டுமல்லாமல் சமூக ஏற்றத் தாழ்வுகளைப் போக்கும் சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டவர் குன்றக்குடி அடிகளார். ஆதி திராவிடர்களை கோவில்களுக்குள் அனுமதித்தவர்; சமஸ்கிருத வேத மந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் வழிபாடு, பூஜைகள் நடத்த வலியுறுத்தியவர்; தமிழ் இலக்கியவாதியாக பல நூற்களை எழுதியவர்; நாத்தீகவாதிகளோடு கைகோர்த்தவர். தமிழ் சமூக விடுதலைக்கு இறுதிவரை உழைத்த குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு பிறந்த விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் அவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் செல்வி அவர்கள்.