Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 62:59:58
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    23/09/2024 Duración: 09min

    திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல், பணிச்சுமையால் இளம் பெண் மரணம் - விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு உறுதி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடும், அதை தொடரும் அரசியல் சர்ச்சைகளும் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • ‘வீட்டுப் பிரச்சனை’ நாடாளுமன்றத்தைக் கலைக்கும்வரை செல்லுமா?

    23/09/2024 Duración: 10min

    நாட்டிலுள்ள ‘வீட்டு' பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அரசு எடுக்கும் முயற்சிகள் போதாது என்று Greens கட்சியினரும், அரசு தவறான தீர்வை மக்கள் மீது திணிக்கிறது என்று Coalition எதிர்க் கட்சிகளும் குற்றம் சாட்டுவதால் இது குறித்த சட்ட முன்வரைவுகளை நாடாளுமன்றத்தில் தீர்ப்பதற்கு அரசின் முயற்சிகள் தோல்வி கண்டு வருகின்றன.

  • இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திஸாநாயக்க நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவாரா?

    23/09/2024 Duración: 12min

    கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் இலங்கையில் நடந்த அதிபருக்கான தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க அதிபராகத் தேர்வாகியுள்ளார்.

  • இலங்கையின் அடுத்த அதிபராக அநுர குமார திஸாநாயக்க இன்று பதவியேற்கிறார்

    23/09/2024 Duración: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 23/09/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • மாணவர் விசாவில் வருபவர்கள் தங்களின் குடும்பத்தை அழைத்து வர முடியுமா?

    23/09/2024 Duración: 11min

    மாணவர் விசாவில் இங்கு வருபவர்கள் தங்களின் குடும்பத்தை எவ்வாறு அழைத்து வருவது? அதில் உள்ள நடைமுறை என்ன? மேலும் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி மற்றும் கல்வி கற்று முடித்த பின் அவர்களுக்கு இங்குள்ள வாய்ப்புகள் யாவை? போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் Adelaide நகரில் Arctic Tern Migration Solutions நிறுவனத்தின் நிறுவனரும் குடிவரவு முகவருமான கோவிந்தராஜ் ராஜு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    21/09/2024 Duración: 06min

    இந்த வார முக்கிய செய்திகள்: 21 செப்டம்பர் 2024 சனிக்கிழமை.

  • NSW மாநில ரயில் பயணிகள் இந்த வார இறுதியில் இலவசமாக பயணம் செய்யலாம்

    20/09/2024 Duración: 02min

    இந்த வார இறுதியில் அதாவது செப்டம்பர் 21 மற்றும் 22ம் திகதிகளில் Sydney Trains, NSW TrainLink, Airport Link மற்றும் Sydney Metro மூலம் இயக்கப்படும் அனைத்து Opal network சேவைகளிலும் ரயில் பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியது

    20/09/2024 Duración: 02min

    ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை இப்போது 27 மில்லியனுக்கும் அதிகமாகியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • செப்டம்பர் 21: உலக அமைதி நாள் (International Day of Peace)

    20/09/2024 Duración: 17min

    உலக அமைதி நாள் 2002 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21-இல் கொண்டாடப்படுகிறது. அமைதி கலாச்சாரம் குறித்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை பிரகடனம் மற்றும் செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டதன் 25வது ஆண்டு இந்த வருடம் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Understanding shared housing in Australia - மற்றவர்களுடன் வீட்டைப் பகிர்ந்துகொள்ளும்போது கவனிக்க வேண்டியவை

    20/09/2024 Duración: 07min

    Shared housing is becoming increasingly popular in Australia, as more people look to reduce rental costs. So, what key factors should you consider when searching for shared accommodation, and how can you avoid potential scams? - வளர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில், அதிகமான மக்கள் shared housing- பகிரப்படும் வீடுகளை நாடுகின்றனர். இப்படியாக மற்றவர்களுடன் வீட்டைப் பகிர்ந்துகொள்ளும்போது கவனிக்க வேண்டியவை தொடர்பில் Afnan Malik ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்

  • கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்

    20/09/2024 Duración: 09min

    கடந்து சென்ற நாட்களில் இலங்கையின் முக்கிய செய்திகள்.

  • “தகவல் தொடர்பு சாதன வெடிப்புகள் வரம்பு மீறிவிட்டன! பதிலடி கொடுக்கப்படும்” - ஹெஸ்புல்லா

    20/09/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 20/09/2024) செய்தி.

  • 2050இல் டிமென்ஷியாவின் எண்ணிக்கை மூன்று மடங்காகாகும்

    19/09/2024 Duración: 11min

    டிமென்ஷியாவின் எண்ணிக்கை 2050 க்குள் கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிமென்ஷியா ஏன் ஏற்டபடுகிறது? இதனை எவ்வாறு தவிர்க்கலாம்? இதுபற்றிய செய்தியின் பின்னணியினை எமக்கு விளக்குகிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர் Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • அதிகளவான ஆஸ்திரேலியர்கள் எந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர் தெரியுமா?

    19/09/2024 Duración: 02min

    COVID-19 எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக இழந்த தமது மகிழ்ச்சியை ஈடுகட்டும் விதமாக ஆஸ்திரேலியர்கள் அதிகளவு எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஒருபக்கம் உள்ளபோதிலும் சர்வதேச பயணங்கள் இப்போது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு அப்பால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • பயன்படுத்திய காரை தனிப்பட்ட முறையில் விற்பது மற்றும் வாங்குவது எப்படி?

    19/09/2024 Duración: 12min

    நாம் பயன்படுத்திய காரை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய நினைக்கும் போது அதில் உள்ள சிக்கல்கள் என்ன? எவ்வாறு அவதானமாக விற்பனை செய்ய வேண்டும்? தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யப்படும் காரை வாங்குபவர்கள் எவ்வாறு பரிசோதித்து அவதானமாக வாங்க வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.

  • ஆதிச்ச நல்லூர் அகழாய்வை உலகமறிய செய்தவர்

    19/09/2024 Duración: 14min

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு குறித்து நீண்ட நாட்களாக எழுதி வருகிறார்.

  • ஆஸ்திரேலியா 75-வது குடியுரிமை தினத்தை கொண்டாடுகிறது

    19/09/2024 Duración: 06min

    கடந்த செவ்வாய்க்கிழமை செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி 75-வது ஆஸ்திரேலிய குடியுரிமை தினமாகும். நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட விழாக்களில் ஏறக்குறைய ஏழாயிரம் பேர் ஆஸ்திரேலியாவின் புதிய குடிமக்களாக மாறியுள்ளனர். இது குறித்து ஆங்கிலத்தில் Tys Occhiuzzi எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • பணக்கார ஆஸ்திரேலியர்கள் முதியோர் பராமரிப்புக்காக அதிக கட்டணம் செலுத்தும் திட்டம் அறிமுகமாகிறது!

    19/09/2024 Duración: 09min

    பெடரல் அரசு முதியோர் பராமரிப்பு துறையில் சில சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக பணக்கார ஆஸ்திரேலியர்கள் முதியோர் பராமரிப்புக்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டிவரும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளது - இங்கு மாற்றம் வருமா?

    19/09/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 19/09/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • ஆஸ்திரேலியாவின் மிக ஆபத்தான சாலைகள் எவை தெரியுமா?

    18/09/2024 Duración: 03min

    ஆஸ்திரேலியாவில் சாலைவிபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமுள்ள மிக ஆபத்தான வீதிகளின் பட்டியலை பிரபல காப்புறுதி நிறுவனமான AAMI தனது புதிய Crash Index அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

página 14 de 25