Sbs Tamil - Sbs

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • Youth adversely affected by Federal government’s decision to cut support for mental health - “அரசின் முடிவு இளையோரை மிக மோசமாக பாதித்துள்ளது”

    12/02/2024 Duración: 10min

    A recent study reveals that numerous young individuals grappling with mental health issues are shying away from seeking help from psychologists, after the government slashed Medicare subsidies for mental health treatment. - மனநல சிகிச்சை பெறுவதற்காக, ஒரு உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவதற்கு Medicare என்ற மருத்துவ காப்பீடு வழங்கும் மானியத்தை அரசு கடந்த ஆண்டு குறைத்ததைத் தொடர்ந்து, மன நலப் பிரச்சினைகளை அனுபவிக்கும் இளைஞர்கள் பலர் சிகிச்சை பெறுவதைத் தவிர்த்து வருகிறார்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.

  • இந்தியாவின் தற்கால நிகழ்வுகள்

    12/02/2024 Duración: 08min

    உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள பொது சிவில் சட்டம், 17வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர், விஸ்வரூபம் எடுக்கும் அதிமுக - பாஜக மோதல் மற்றும் தமிழகம் முழுவதும் 27 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • முதலீட்டுச் சொத்துக்கள் மீதான வரிச் சலுகைகளை மாற்றுவதற்கான அழுத்தங்கள் அதிகரிப்பு!!

    12/02/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 12/02/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    09/02/2024 Duración: 05min

    இந்த வார முக்கிய செய்திகள்: 10 பெப்ரவரி 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • விமானத்தில் பயணிக்கும் முன்னர் பயணிகளின் எடையை ஏன் கணக்கிடுகின்றனர்?

    09/02/2024 Duración: 02min

    விமானத்தில் ஏறுவதற்கு முன் பயணிகளின் எடையை கணக்கிடுவதற்கான அவசியம் என்ன? இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    09/02/2024 Duración: 08min

    இலங்கையின் 76வது சுதந்திர தினம் கொழும்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது. சுதந்திர தினத்தன்று வடக்கு கிழக்கு பகுதிகளில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. தடுப்பூசி மருந்து இறக்குமதியில் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ள சாந்தன் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லையென இலங்கை அரசு அறிவித்துள்ளது. இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Grand Pongal Festival in Perth! - பெர்த் நகரில் மாபெரும் பொங்கல் விழா!

    09/02/2024 Duración: 14min

    A grand Pongal festival is organised by 13 Tamil Organisations of Western Australia and the Tamil Association of Western Australia (TAWA). The event will be held on February 17th from 3 pm to 9 pm at Weeip Park, 35th Crescent, Midland. Executives of the Western Australia Tamil Sangam discussed the event with SBS Tamil: Mr.Senthil (President), Mr.Sethuraman (Vice President), Mr.Seetharaman (Secretary), and Ms.Kavita Guppusamy (Event Coordinator). Produced by RaySel. - மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் 13 தமிழ் அமைப்புக்களும், மேற்கு ஆஸ்திரேலியா தமிழ் சங்கமும் இணைந்து நடத்தும் தமிழர் திருவிழா பெப்ரவரி மாதம் 17 ஆம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை Weeip Park, 35th Crescent, Midland எனுமிடத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வு குறித்து மேற்கு ஆஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள் நம்முடன் கலந்துரையாடுகின்றனர்: செந்தில் (தலைவர்), சேதுராமன் (துணை தலைவர்), சீதாராமன் (செயலாளர்) & கவிதா குப்புசாமி (நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்). இவர்களோடு உரையாடியவர்: றைசெல்.

  • "உதவித் தொகை தவறாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்!"

    09/02/2024 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 09/02/2024) செய்தி.

  • What is Lunar New Year, and how is it celebrated in Australia? - லூனார் புத்தாண்டு என்றால் என்ன? அது எப்படி கொண்டாடப்படுகிறது?

    09/02/2024 Duración: 08min

    "Lunar New Year", also known as the "Spring Festival", has become a significant part of Australian culture. The celebration is so popular that Sydney's version is considered the largest outside Asia. - "வசந்த விழா" என்றும் அழைக்கப்படும் லூனார் புத்தாண்டு அல்லது சந்திரப்புத்தாண்டு ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக மாறியுள்ளது. இந்த கொண்டாட்டம் மிகவும் பிரபலமானது, சிட்னியில் இடம்பெறும் இந்த கொண்டாட்ட நிகழ்வு ஆசியாவிற்கு வெளியே மிகப்பெரியதாக கருதப்படுகிறது.

  • People could be hit with an extra 15 Dollars for a trip to the doctor in NSW - NSWஇல் குடும்ப வைத்தியரைப் பார்ப்பதற்குக் கூடுதலாகப் $15 செலுத்தவேண்டும்?

    08/02/2024 Duración: 09min

    Australia's peak body for General Practitioners warns people could be hit with an extra 15 dollars for a trip to the doctor, if New South Wales follows through with an additional tax. From August, medical practices will have to pay extra payroll tax for tenant doctors, who were previously classed as independent contractors and made exempt. General Physician Dr Thiyagarajah Srikaran explains the situation. Segment by Praba Maheswaran. - நியூ சவுத் வேல்ஸ் மாநிலமானது வைத்தியர்களுக்கான extra payroll tax - கூடுதல் ஊதிய வரி அறவிடுதலை நடைமுறைப்படுத்தினால் குடும்ப வைத்தியரைச் சந்திப்பதற்காக மக்கள் மேலதிகமாகப் 15 டாலர்கள் செலுத்தவேண்டிவரும் என்று Royal Australian College of General Practitioners அமைப்பு எச்சரித்துள்ளது. இதுபற்றி சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர் Dr தியாகராஜா சிறீகரன் அவர்களுடன் உரையாடி செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • கவிக்கோவின் கவிதைகளுக்கு கவிக்கோ தரும் விளக்கம்

    08/02/2024 Duración: 12min

    உடலால் மறைந்தாலும், தமிழ் கவிதை வாழும்வரை வாழ்வார் எனும் தகமை கொண்ட பெரும் கவிஞர்களில் ஒருவர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள். அவர் மறையும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (2013) சிட்னி வந்திருந்தபோது அவர் தனது கவிதைகள் குறித்து “கவிதையும் கவிஞரும்” தலைப்பில் விளக்கிய ஒலிப்பதிவின் மறுபதிவு. நிகழ்ச்சியாக்கம்: றைசெல். பாகம் - 2.

  • Boost Your Academic Success: Insights from Australian Studies on Achieving Higher Grades in School - பள்ளிக்கூடத்தில் அதிக மதிப்பெண் பெற இதைச் செய்யுங்கள் என்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு!

    08/02/2024 Duración: 12min

    With the new school year underway, there is now increasing evidence that is linked to greater academic success. The story by Samantha Beniac-Brooks for SBS News, produced by RaySel for SBS Tamil. - நாடு முழுவதும் பள்ளிக்கூடங்கள் திறந்துவிட்டன. புதிய கல்வியாண்டு துவங்கி மாணவர்கள் வெற்றி இலக்கை நிர்ணயிக்கும் வேளை. ஒருவர் எதை செய்தால் நல்ல மதிப்பெண் பெறமுடியும் என்று ஆய்வு ஒன்று யுக்தி ஒன்றை முன்வைக்கிறது. அதை விளக்கும் விவரணம் இது. ஆங்கில மூலம் SBS-News க்காக Samantha Beniac-Brooks. தமிழில் தயாரித்தவர் றைசெல்.

  • Why Interest Rates Persist Amidst Falling Inflation - பணவீக்கம் குறைகிறது ஆனால் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை...ஏன்?

    08/02/2024 Duración: 12min

    In Australia, inflation has risen over the past two years but is currently experiencing a decline. Despite this trend, the Reserve Bank of Australia has opted not to reduce interest rates. Appu Govindarajan, a columnist on economics, a certified public accountant and associated chartered accountant, analyses the correlation between inflation and rate hike. Produced by RaySel. - ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு வருடங்களாக உயர்ந்து வந்த பணவீக்கம் தற்போது குறைந்துவருகிறது. ஆனால் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கவில்லை. இது குறித்து பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள் விளக்குகிறார். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்

  • கைபேசி பாவனையை கண்டுபிடிக்கும் கமரா: கைபேசியே இல்லாதவருக்கு அபராதம்!!

    08/02/2024 Duración: 02min

    NSW மாநிலத்தில் 77 வயதான நபர் ஒருவர் வாகனம் ஓட்டும் போது கைபேசியை பாவித்தார் என கைபேசி பாவனையை கண்டறியும் கமராவில் படம்பிடிக்கப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • Story of our nation – Part 3: First Steps - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம்3: எப்படியான நாடு?

    08/02/2024 Duración: 08min

    We are bringing the story of Australian political history in ten parts. In the third episode of this series, we examine the first steps Australia took as a federated country. - இந்தத் தேசத்தின் அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகத்தில், ஒரு நாடாக உருவாகிய ஆஸ்திரேலியா எப்படியான நாடாக ஆரம்பித்தது என்று ஆராய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • புதிய தொழிலாளர் நலச் சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேறுகிறது

    08/02/2024 Duración: 05min

    செய்திகள்: 8 பெப்ரவரி 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • Apology: Why "Sorry" Is Not Enough - மன்னிப்பு: வார்த்தை ஒன்று போதுமா?

    07/02/2024 Duración: 12min

    Next week, on Tuesday, February 13th, we commemorate the 16th anniversary of the first-ever apology by an Australian Prime Minister to Indigenous peoples.. - ஒரு ஆஸ்திரேலிய பிரதமர் பூர்வீகக் குடி மக்களிடம் முதன்முறையாக மன்னிப்புக் கேட்டதன் 16வது ஆண்டு நினைவு அடுத்த வாரம், பிப்ரவரி 13ஆம் தேதி செவ்வாய்க் கிழமையாகும்.

  • The JN.1 variant is driving Australia's COVID case spike. How protected are we? - கோவிட் அலை - புதிய திரிபு JN.1 ஏற்படுத்தும் தாக்கம்

    07/02/2024 Duración: 13min

    Health authorities are reporting a surge in COVID-19 cases in some states, driven by a variant called JN.1 which experts say is better at evading our immune system. Dr Rajesh Kannan , working as GP in Selvi talks about the new variant and it's impact with Selvi. - கோவிட் வைரஸின் புதிய JN 1 திரிபு காரணமாக நாட்டில் கோவிட் தொற்று பரவல் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த புதிய திரிபு கொண்டு வரும் தாக்கம் மற்றும் இதற்கான சிகிச்சை குறித்து சிட்னியில் குடும்ப மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் ராஜேஷ் கண்ணன் அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி.

  • Your boss could be barred from contacting you after hours under a new bill - பணியிட நேரத்திற்கு வெளியே வேலை செய்ய மறுக்கலாமா?

    07/02/2024 Duración: 09min

    Workers across Australia could soon have a right to disconnect if parliament agrees to reform the Fair Work Act. What is this right and how can it change your life? This feature explains more - பணியிட நேரத்திற்கு வெளியே வேலை செய்ய தொழிலாளர்கள் மறுக்கும் உரிமையை வழங்கும் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. Fair Work சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள இந்த மாற்றங்கள் குறித்தும் இது குறித்து மக்களின் கருத்துக்களையும் விவரணமாக தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இலங்கையில் செய்தியாளர்களின் நிலை!

    07/02/2024 Duración: 06min

    இலங்கையில் செய்தியாளராக இருப்பதில் நிலவும் சிக்கல்களையும், பிரச்சனைகளையும் தொகுத்து விவரணமாக முன்வைக்கிறார் நமது யாழ்ப்பாண செய்தியாளர் மதுஸ்ரீ.

página 24 de 25